Wednesday, December 28, 2011

புகை பிடிப்பவர்களின் மரணம் அதிகரிக்கிறது!


இன்றுவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்ததங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் காண்டுபிடிக்கபபட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன், சயனைட், அமோனியம், ஆசனிக், டி.டி.ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக் காட்டத்தக்கவை.
புகையிலையில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் எதுவும் மனிதனின் உடல், உள ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை அல்ல. அவற்றின் தீங்குகள் பாதிப்புககள் மிகவும் மோசமானவை. என்றாலும் இத்தீங்குகளும், பாதிப்புகளும் புகையிலையைப் பாவித்த உடனேயே வெளிப்படுவதில்லை. இதற்கு சிறிது காலம் எடுக்கும். இதன் காரணத்தினால்தான் புகையிலையைப் பாயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இப்போது உலகில் 1.3 பில்லியன் பேர் புகை பிடிக்கிறார்கள்.ஆனால் புகையிலைப் பாவனையால் வருடா வருடம் 5 மில்லியன் பேர் இறக்கிரார்கள். 
இது 2020 ம் ஆண்டாகும் போது 10 மில்லியனாக அதிகரிக்க முடியுமென நம்ப்படுகிறது.



0 comments:

Post a Comment